காழ்ப்புணர்வுகளால் மக்கள் நலன்கள் தடுக்கப்படுவதை ஏற்கமுடியாது – சபை அமர்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் வலியுறுத்து!

தனிப்பட்ட சுயநலன்களுக்கான காழ்ப்புணர்வுகளால் எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமீடியஸ் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை சபையின் உறுப்பினர்கள் கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் கூடியது. இதன்போது மாநகரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு இந்நிலையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
பிரதேசங்களின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்போது திட்டமிட்டவகையில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கென்றே சிலர் செயற்படுகின்றனர். இவர்களது இத்தகைய செயற்பாடுகளால் மக்களின் தேவைப்பாடுகளும் பிரதேத்தின் அபிவிருத்தியுமே தடைப்படுகின்றது.
யாழ். மாநகரின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொறுத்தளவில் அந்தந்த வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே முன்மொழிகின்றனர். அவை அந்த பிரதேச மக்களின் நலன் கருதியதாகவே முன்மொழியப்படுகின்றது.
ஆனால் குறித்த உறுப்பினர்கள் மீது ஒருசிலர் கொண்டள்ள காழ்ப்புணர்வு காரணமாக அவரை பழிவாங்குவதாகவும் அல்லது அவருக்கு சேறு பூசுவதாகவும் எண்ணி மக்களை குழுப்புவதுடன் குறித்த பகுதிகளின் அபிவிருத்தி சார் நலன்களை தடுக்க முயற்சிப்பது வேதனையானது.
பல்வேறு தேவைகளுடன் வாழும் மக்களை கொண்ட எமது யாழ் மாநகரப்பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய தேவைப்பாடுகள் ஏராளம் உள்ளன. இதை கிடைக்கின்ற சந்தரப்பங்களை கொண்டு நாம் முன்னெடுப்பதே அவசியம்.
அதேவேளை சிலசமயம் தவறுதலாகவோ அன்றி அவசியமின்றியோ ஒரு சில தெரிவகள் மன்னெடக்கப்படுவதாக யாராவது எண்ணினால் அதை சபையின் முதல்வருக்கோ அற்றி சபையின் ஆணையாளருக்கோ குறித்த பகுதியின் பொது அமைப்புகள் சமயப் பெரியவர்கள் முறையிட்டு நியாயத் தன்மை இருந்தால் மாற்றியமைக்க முடியும்.
இந்த உயரிய சபையில் உள்ள 45 உறுப்பினர்களது மன எண்ணங்களும் 45 வகையானவை. அதனால் அவர்களது செயற்பாடகளும் எண்ணங்களும் வெவ்வேறானதாகவே இருக்கமுடியும் ஆனாலும் மக்கள் நலன் பிரதேசத்தின் அபிவிருத்தி என்ற கோட்டில் அனைவரும் ஒருமித்த நிலையோடு நின்று செயற்பாடுகளை முன்னெடுத்தாலேயே அந்த திட்டங்களை நிறைவுசெய்துகொள்ள முடியும்.
அந்தவகையில் தனிப்பட்ட வன்மங்களால் ஏற்படும் காழ்ப்பணர்வகளை மக்கள் நலன்களில் காட்டுவதை விடுத்து மக்களுக்கான தேவைப்பாடுகளை முடியுமானவரை செயற்படுத்துவதற்கு அனைத்து உறுப்பிர்களும் காழ்ப்புணர்வுகளை கழைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|