காலநிலை மாற்றத்தால் 2020 ஆம் ஆண்டில் ஆசியாவுக்கே பெரும் பாதிப்பு – கிறிஸ்டியன் எய்ட் நிவாரண அமைப்பு சுட்டிக்காட்டு!

Monday, December 28th, 2020

2020ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தங்கள் பத்தில் 6 அனர்த்தங்கள் ஆசியாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உலகில் ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணமென கிறிஸ்டியன் எய்ட் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் ஆசியாவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் முதன்மை வாய்ந்ததாக அமைவதோடு இவ்வாண்டில் 40 பில்லியன் டொலர் நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் கருதப்படுகின்றது.

இதேவேளை, சூறாவளி, காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் ஐக்கிய அமெக்காவுக்கு 60 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நட்டமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முழு உலகமும் கொரோனா எனும் சமூகத் தொற்றிலிருந்து மீள்வதற்கு பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இன்னல்களால் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: