காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த ஏனைய வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் வேண்டாம் – விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க வலியுறுத்து!

Friday, May 19th, 2023

தற்போதைய காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது வைத்தியர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நிபுணர் வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: