காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம்!

Sunday, July 30th, 2017

காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக சர்வதேசத்தின் ஆதரவுடன் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அநுராதபுரத்தில் நிகழ்வொன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர்கள் குறித்து தற்போது ஆராயப்படுகிறது

பல வருடங்களாக காணாமல்போயுள்ளவர்களாக கூறப்படுவபர்கள், ஒன்று நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் மறைந்திருக்கவேண்டும்அல்லது உண்மையாகவே அவர்கள் காணாமல்போயிருக்க வேண்டும்

காணாமல்போனவர்கள் மரணித்து விட்டார்களா? இல்லையா? என்ற தீர்ப்புடன் நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளனஇந்த நிலையில், இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு காணாமல்போனோரை தேடுவது போல அவை அனைத்தையும் மறக்கும் நாளொன்றை ஏற்படுத்துவபற்றி ஏன் சிந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் அனைவரும் காயங்களுடன் வீதியில் இருக்க வேண்டும்அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அனைத்து நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இருக்கின்ற பிரச்சினைக்கு தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கலாம்.

இதனூடாக எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பங்களிப்பை வழங்கி, இவை அனைத்தையும் மறக்கும் நாளொன்றை உருக்க முடியாதா என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்


தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந...
5 உடன்படிக்கைகள் சிங்கப்பூருடன் கைச்சாத்து!
உண்மை விலைகளை தெளிவாக ஆடைகளில் பொறிக்க வண்டும் - பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!
தேர்தலைப் பின்தள்ளுவது ஜனநாயக விரோதச் செயல்-  கூறுகிறார்  மகிந்த தேசப்பிரிய!
நாளை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்!