கல்வி நிறுவன பிரதானிகளுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!

Friday, March 6th, 2020

தற்போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும், கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வாறான பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் தரப்பினர் இரண்டு வார காலம் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் இந்த கோரிக்கையின் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதேவேளை மேலும் அந்த அறிக்கையில்,

சீனா, கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நாடுகளில் இருந்து இத்தினங்களில் இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி மற்றும் கல்விசார பணியாளர்களை இரண்டு வார காலத்திற்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts: