கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நாளை அனுமதி!

Monday, June 19th, 2017

கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20ம் திகதி உள்வாங்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 303 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இது விடயம் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் கடிதங்கள் தபால் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

அனுமதி பெற்ற மாணவர்களின் விபரங்கள் கல்வியமைச்சின் கல்வியியல் கல்லூரி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கூறினார். இம்முறை கடந்த வருடத்தை விட கூடுதலான மாணவர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் குறிபிட்டார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை கல்வி செயற்பாடுகள் தொடர்பான பாடத்திட்டங்களும் கற்கை நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கற்கை நெறிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பத்து தினங்களுக்கு நிறுவன ரீதியான ஆரம்ப பயிற்சி வழங்கப்படடும் என்று திரு.பண்டார மேலும் தெரிவித்தார்.

Related posts: