கல்வித்துறை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனாவைத் தடையாகக் கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, December 10th, 2020

கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனா நோய்த் தொற்றை தடையாகக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு தேசியக் கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: