கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினுடன் உரையாடிய பிரதமர் ரணில்!

Friday, August 3rd, 2018

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.

இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வைத்து, மு.க.ஸ்டாலினுடன் உரையாடி, மருத்துவமனையில் உள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதி ஆலயத்தில் தரிசனம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அவர் இன்று காலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

Related posts: