கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது – சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ்வரி திட்டவட்டம்!

Friday, November 13th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் உருவாக்கப்படுள்ள யாழ்பாணம் கலாசார மையத்தின் நோக்கம் திசை திருப்படுமானால் அதனை எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று யாழ். மாநகர சபையின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் இடம்பெற்றது. இதன்போது குறித்தவிடயம் தொடர்பபில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

குறித்த திட்டத்தை மேலும் வலுவூட்டும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை இருந்த போது இக்கலாசார மத்திய நிலையத்தை அமைக்க யுத்தத்தினால் அழிவடைந்திருந்த யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு அமைந்திருந்த பகுதி மாநகர சபையின் ஏகோபித்த ஆதரவு மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

கலாசார மத்திய நிலையம் அமைக்கும் பொருட்டு மாநகரசபையின் அங்கீகாரத்துடன் திறந்த வெளியரங்கு மைதானம், அதனுடன் இணைந்திருந்த பாதை, புல்லுக்குளம் என்பன மாநகரசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனுமதி பெற்று இதற்கான ஆவணம் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக கொழும்பின் இந்திய உயர்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக கலாசார மையம் அமைப்பதற்கும், கலாசார மையத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய உயர்மட்;டக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை கட்டிட கலைஞர் நிறுவனத்தின் தலைவர்  இந்திய உயர்ஸ்தானிகரின் பிரதிநிதி, யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர், யாழ்.மாநகர முதல்வர் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு இக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கலாசார மையத்தின் உள்ளடக்கம் மாநகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் 600 பேரை உள்ளடக்கிய கேட்போர்கூடம் பல்லூடக மையம் நூல் நிலையம் ஒன்லைன் ஆராய்ச்சி மையங்கள் கண்காட்சிக்கூடங்கள் மியூசியம் கர்நாடக சங்கீத வகுப்புக்கள் நடாத்துதல் இசைக்கருவி வகுப்பு நடாத்துல் மொழியாற்றலை விருத்தி செய்தல்     சிவில் அமைப்புக்களின் கருத்தரங்குகள் நடாத்துவதற்கான கேட்போர் கூடம் கருத்தரங்கு கூடங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக கலாசார மையம் அமைய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்கமைய மேற்படி குழுவினால் இலங்கை கட்டிடக் கலைஞர்களிடமிருந்து வரைபடங்கள் பெறப்பட்டன. இதற்கமைய இறுதிமுடிவினை மேற்கொள்ளும் பொருட்டு நடுவர் குழாம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் இந்திய உயர்ஸ்தானிகரின் முன்மொழிவாக அவரது பிரதிநிதி  சாந்த சீல நாயர் – இந்திய அரசின் முன்னாள் செயலாளர்)  இலங்கை கட்டிட நிறுவனத் முன்னாள் தலைவர் – ஜெயந்த பெரேரா,  யாழ்.மாநகர முதல்வர் – திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதி – நிகால் சோமவீர ஆகியோர் இடம் பெபற்றிருந்தனர்.

இதற்கமைய பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் தெரியப்பட்ட கட்டிட வரைபடமே இன்று யாழ்.மத்தியில் மிளிர்கின்ற கலாசார அடையாள சின்னமாகும்.

இதேவேளையில் ஒப்பந்தத்தில் காணப்பட்டிருந்த இலங்கையின் இறையாண்மைக்கு ஒவ்வாதா 9 வது சரத்தில் காணப்பட்ட விடயம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக நீக்கப்பட்டது

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதை தவிர்த்து வேறு எந்த நோக்கத்துக்காகவும் இக்கட்டிடம் பயன்படுத்தக் கூடாது என்பதை முன்னாள் மாநகர முதல்வர் என்றவகையில் டக்ளஸ் தேவானந்தா சார்பாக வலியுறுத்த விரும்புகின்றேன் என்பதுடன் இக்கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய காரணகார்த்தவாக திகழ்ந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்

Related posts: