கர்ப்பிணிப்பெண் ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டும்!

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் நேற்று (19)விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரு சகோதரர்களின் சார்பிலும் இதுவரை சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகுவதில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.
அடுத்த தவணையின் போது இவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும், சந்தேகநபர்களின் உறவினர்கள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம்-03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
|
|