இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உட்பட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

000

Related posts: