கனடா  தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!

Wednesday, April 25th, 2018

கனடாவில் கடந்த மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கை ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வான் ஒன்று நேற்று முன்தினம் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த 48 வயதான ரேனுக அமரசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையில் ஹொரன பிரதேசத்தில் பிறந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் மீது வேண்டும் என் வாகனத்தை செலுத்தி அனர்த்ததை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோடி இருந்தார். எனினும் அவர் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: