கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!

Tuesday, December 6th, 2016

ராஜாஜி இல்லத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அஞ்சா நெஞ்சா அரசியல் ஆளுமை திறன் கொண்ட தலைவியான ஜெயலலிதாவின் உடலுக்கு மக்கள் தங்களது கண்ணீரின் அஞ்சலியை அமைதியாக செலுத்தி வருகின்றனர்.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.  ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் உடல் மீது மூவர்ண தேசிய கொடியும் அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை போர்த்தி கண்ணுறங்கிறார்.

 ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய வீரமங்கையின் உடல் அவரது மக்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது. அவரது உடலுக்கு அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சி பேதமின்றி ஏராளமான அரசியல் தலைவர்கள், பிற மாநில முக்கிய தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிமுகவின் விடிவெள்ளி ஜெயலலிதாவின் அமரரானதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பொதுமக்களும் தொண்டர்களும் தங்களின் கண்ணீரால் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சா நெஞ்சத்திற்கு உலகத்தின் அனைத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி பேதமின்றி ஏராளமான அரசியல் தலைவர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

மக்களின் கண்ணீரில் வெள்ளத்தில் தத்தளிக்கும் அஞ்சா நெஞ்சா ஆளுமை திறன் கொண்ட ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Untitled-2 copy

Related posts: