மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டு: தென் ஆப்பிரிக்காவில் 11 டாக்ஸி ஓட்டுநர்கள் பலி!

Monday, July 23rd, 2018

தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்கள் மறைந்திருந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் டாக்ஸி ஓட்டுநர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது – டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் சக ஓட்டுநர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு மினிபஸ்ஸில் ஊர் திரும்பும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 குவஸுலு-நடல் மாகாணத்தின் கொலன்ஸஸா மற்றும் வீனன் நகரங்களுக்கிடையில் மறைந்திருந்த மர்ம நபர்கள் ஓட்டுநர்கள் வந்த மினிபஸ்ஷஸ நோக்கி சராமரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், மினிபஸ்ஸுக்குள் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கௌடங் மாகாணத்தை சேர்ந்தவர்கள். தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தென் ஆப்பிரிக்காவில் ஒரு வழித்தடத்தில் டாக்ஸியை இயக்கும் போட்டியில் டிரைவர் குழுக்களிடையே அவ்வப்போது மோதல் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. அது, சில நேரத்தில் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது.

 கடந்த மே மாதத்தில் கேப் டவுனில் மினிபஸ், டாக்ஸி டிரைவர் இடையே நடந்த மோதல் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: