கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு!

Monday, June 12th, 2017

கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்டாரில் உள்ள இலங்கையர் அமைப்புகளுக்கு அந் நாட்டுக்கான இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் புதன் கிழமை இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்டாரில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் லியனகே, எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இதனுடன் உணவு அல்லது தொழில் தொடர்பில் இலங்கையர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமைய தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளர். இதனுடன் பிரச்சினை ஏதும் காணப்பட்டால் தன்னை அழைக்குமாறு அவர் கூறியுள்ளார். தொலைபேசி இலக்கம்:0097455564936

Related posts: