கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் – கல்வி அமைச்சர்!

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாய பாடமாக மாற்றப்படும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். கிராம மட்டத்தில் தகவல்தொழில்நுட்ப பாட அறிவை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் அனைத்துப் பாட விதானங்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பாடமாக அமையவுள்ளது. நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்குமுறையான தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்க கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை!
கூட்டமைப்புக்கு கிடைத்த 32 கோடியில் நடந்த அபிவிருத்தி எங்கே? - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ...
யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் - பேருந்து சேவைகளும் 8 மணிவரை இடம்பெறு...
|
|