கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் புதனன்று தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம !

அடுத்த வாரம் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே விலை மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டிய அவர் பொதுமக்களின் நிலைமையை கருத்திற் கொண்டு சிறிய அதிகரிப்பையே மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
திருமலையில் இரு மாதங்களில் 1000 பேருக்கு டெங்குத் தொற்று 3பேர் சாவு!
சர்ச்சைக்குரிய திண்மக்கழிவு பிரச்சினை தீர்வுக்கு நடவடிக்கை!
நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் - சமுர்த்தி திட்டத்தை முன்னேற்றி கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டம...
|
|