கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு!

Friday, March 24th, 2017

கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு வள்ளுவர் சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு நான்காம் வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையம் சுமார் 27 ஆண்டுகளாக கடற்படையினரது பாவனையில் இருந்துவந்ததுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதி மக்கள் தமது சனசமூக நிலையத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பல இடர்பாடுகளை சந்தித்து வந்திருந்த நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுவந்திருந்தனர்.

மக்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா மண்டைதீவு பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினருடன் அப்பகுதி மக்களுக்கு குறித்த சனசமூக நிலையத்தின் தேவைப்பாட்டின் அவசியங்களை எடுத்துக்கூறி பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பணிப்பின்பேரில் கட்சியின் யாழ்மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தொடர்ச்சியாக கடற்படையினருடன் மேற்கொண்டுவந்த பேச்சுக்களின் மூலம் மக்களது பாவனைக்காக இன்றையதினம் குறித்த சனசகமூக நிலையம்  வேலணைப்பிரதேச தலைமை அதிகாரி எம் அம்பிகைபாகன், அப்பகுதி கிராம உத்தியோகத்தர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் கந்தையா ஞானமூர்த்தி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் கடற்படையினர் மக்களது பாவனைக்காக கையளித்தனர்.

இதன்போதுஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக உறுப்பினர்களான ஜெயவாணி மற்றும் என். பிரதீபன் ஆகியோருடன் குறித்த பகுதி மக்களும் உடனிருந்தனர்.

17506247_1355864071119343_180841927_n

Related posts: