கடற்கலங்களின் எண்ணிக்கை குடாவில் அதிகரிப்பு!

Tuesday, October 4th, 2016

யாழ்.மாவட்டத்தில் தொழிலில் ஈடுபடும் கடற்கலங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-  யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டை விடவும் நடப்பு ஆண்டில் 171 கடற் கலங்கள் அதிகரித்துள்ளன. குடாநாட்டில் உள்ள 14 பரிசோதகர் பிரிவிலும் மொத்தமாக இதுவரை 6ஆயிரத்து 942கடற்கலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டில் 6ஆயிரத்து 771 கலங்களே பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 942 படகுகளிலும் பல நாள் படகுகள் 68, ஒரு நாள் படகுகள் 322, கண்ணாடி இளைப் படகுகள் 3ஆயிரத்து 803,இயந்திர மயப்படுத்தப்பட்ட பாரம் பாரிய படகுகள் 591, இயந்திர மயப்படுத்தப்படாத ஆயிரத்து 932 படகுகள் காணப்படுவதோடு, 226 கரைவலைப் படகுகளும் காணப்படுகின்றன. இன்னும் சில படகுகளே தமது படகுகளைப் பதிவு செய்யவில்லை. அவையும் இன்றுடன் முழுமை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tamil-Daily-News-Paper_56130182744

Related posts: