கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் பொலிஸ் பேச்சாளர் கோரிக்கை!

Sunday, October 8th, 2023

நாட்டில் வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ  கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும் அவர், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த விபத்துகளில் ஆயிரத்து 733 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: