க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு!

Monday, December 19th, 2016

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகள் ஜனவரி மூன்றாம் திகதியிலிருந்து 12 திகதி வரை முதலாவது கட்டமாகவும் ஜனவரி 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இரண்டாவது கட்டமாக நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் சுமார் 62 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தொகை கடந்த வருடத்திலும் பார்க்க அதிகமாகும். இம்முறை இரண்டு கோடி பத்து இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. வரலாற்றிலேயே ஆகக்கூடுதலான மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியுள்ளமை இதற்கு காரணமாகும். நேற்று முன்தினம்  நிறைவடைந்த பரீட்சை வரலாற்றிலேயே முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறைந்த அளவில் காணப்பட்ட கபொத சாதாரண தர பரீட்சையாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்W.M.N.J.புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.

42eec6e24a49c34d026bb100684af425_XL

Related posts: