கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 356 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Tuesday, June 15th, 2021கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்றையதினமே நாளொன்றில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 33 ஆயிரத்து 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றையதினம் 2ஆயிரத்து 795 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் அநாவசியமாக பயணித்த 56 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றையதினமும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|