கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழகம்!

Sunday, March 12th, 2017

அம்முறை நடைபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழாவை தமிழக பக்தர்கள் புறக்கணித்துள்ளனர்.

இலங்கை பக்தர்கள் மட்டுமே இம்முறை திருவிழாவில் பங்கேற்றுள்ளதுடன், நேற்று ஆரம்பமான கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இன்றுடன் முடிவடைகின்றது.

இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழக அடியார்கள் வருவார்கள் என இலங்கையால் எதிர்பபார்க்கப்பட்ட போதும், தமிழக அடியார்கள் எவரும் திருவிழாவில் பங்கேற்கவில்லை.

தமிழக மீனவரான பிரிட்ஜோ (22) அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை கடற்படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழக மீனவர்களும், அரசியல்வாதிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என இலங்கை அரசாங்கமும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கும், கடற்படைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை தமிழக அடியார்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


விவசாயிகளின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் விவசாய முன...
எரிபொருள் பற்றாக்கறை – யாழ்ப்பாணத்திலும் முடங்கிவரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் - அவதியுறும் மக்கள...
ஜப்பான் - இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்கத் நடவடிக்கை - முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமை...