ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Sunday, April 7th, 2019

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு குறைந்த தரத்திலான ஊசி மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடு குறித்த ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒளடதங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன, விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளின்போது, வேறு ஒளடதங்கள் தொடர்பில் கேள்விக்குட்படுத்துவதானது, இந்த விசாரணைகளை திசைத்திரும்பும் என்றும், எனவே, அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Related posts: