ஒரு மூட்டை உரத்தை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, July 11th, 2022

இந்திய அரசின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு மூட்டை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடன் வசதியின் கீழ், ஓமானிலிருந்து யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்ற போதிலும், கூடிய விரைவில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: