அமைச்சரவை மாற்றதை வலியுறுத்தும் தொண்டு நிறுவனங்கள்

Friday, May 19th, 2017

ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவினால்  அவரது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரே காரணம் என்று தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்துகின்றன.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தொண்டு நிறுவனங்களின் ஒன்றியமான Pரசயறநளi டீயடயலய என்னும் அமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றனர் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

சமூக மற்றும் மதங்களுக்கான நிறுவனம் ஊநவெசந கழச ளுழஉநைவல யனெ சுநடபைழைn (ஊளுசு) என்ற பெயரில் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டிணைவாக இயங்கும் இந்த நிறுவனம் மரதானையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தது. அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறிகள் பலவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளது என்றும் அதில் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட  அரசியல் யாப்பு திருத்தமும் அடங்குகிறது என்றும் அது கவலை வெளியிட்டுள்ளது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்த அமைப்பின் செயல் பாட்டாளர்களன சமன் ரத்னபிரிய, காமினி வியாங்கொட, கே.டபிள்யு. ஜனரஞ்சன, சரத் விஜேசூரிய மற்றும் லூசியன் புலலத்சிங்கள ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

மைத்ரி அரசாங்கம் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும் ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அலட்சியப்போக்கே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

சிறிலஙகா சுதந்திரக் கட்சியினர்; நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது தொடர்பில்கூட முடிவெடுக்க முடியாமல் இருப்பதாக காமினி வியாங்கொட தனது ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார்.

கடந்த மஹிந்த அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஒரு சரியான பொறிமுறை கூட இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும் கடந்த ஆட்சியாளர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளையும் காணமுடியவில்லை என்றும் வியாங்கொட சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களை வேண்டுமென்றே அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துவதை தவிர்த்து வரும் இந்த அரசாங்கதின்  அலட்சியப்போக்கைக் கண்டித்தும் சமன் ரத்னபிரிய கருத்து தெரிவித்தார்.

எந்த அரசாங்கமும் முதல் இரண்டாண்டுகள் எதுவும் சாதிக்காமல் அதிகாரத்தில் இருந்தால் அதன் செல்வாக்கில் சரிவு ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனவே இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் புதிய அரசியல் யாப்பையாவது உடனடியாகக் கொண்டுவரவேண்டும் என்றும் தேவைப்பட்டால் பொதுவாக்கெடுப்பிற்குச் செல்வதற்குக்கூட தயங்கக்கூடாது என்றும் கூறினார்.

அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது தொடர்பில் நடைபெற்றுவரும் கருத்தாடல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த சரத் விஜேசூரிய தற்போதைய சூழலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம். மேலும் அமைச்சர்களின் இலாகாக்கள் சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் தற்போதைய பொருத்தமற்ற நிலை தவிர்க்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

Related posts: