ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் – இலங்கை மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டு!

Wednesday, May 12th, 2021

ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்.

தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் கண்டறியப்பட்ட நோயாளிகளின் மரணங்கள் குறித்த விபரங்களே வெளியாகின்றன என தெரிவித்துள்ள பத்மா குணரட்ண அவர்களை தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்து கிசிச்சை அளித்த நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு முன்னர் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களே தற்போது உயிரிழக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சிலவாரங்களில் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: