வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை!

Saturday, March 18th, 2017

வரிச்சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்து தவறாக இலாபம் சம்பாதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வரிச்சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்து தவறாக இலாபம் சம்பாதித்துள்ளதாக 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஆணைக்குழு, மூன்று நீதியரசர்களை கொண்ட உயர்நீதிமன்ற அமர்விற்கு அறிவித்துள்ளது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி நாகாலந்த கொடித்துவக்கு இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.இதேவேளை இம்மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: