இலங்கை ஏற்றுமதிச் சபையின் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Thursday, June 7th, 2018

யாழில். இலங்கை ஏற்றுமதிச் சபையின் அலுவலகம் இன்று  (07) யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் க.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் நிர்வாக தலைவி இந்திரா மல்வத்த மற்றும் வடமாகாண முதலீட்டுச் சபையின் முகாமையாளர் உட்பட இலங்கை ஏற்றுமதிச் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாணத்தில் 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், யாழ்.மாவட்டத்தில் இலங்கை ஏற்றுமதிச் சபை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில், வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான ஏற்றுமதிக்கான சந்தர்ப்பத்தினை வழங்குதல் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பணி தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர் மற்றும் வியாபார முன்னோடிகளுக்கிடையில் விழிப்புணர்வினை ஏற்படுத்ததுதல், வடமாகாணத்தில் இலங்கை ஏற்றுமதிச் சபையின் செயற்பாடு தொடர்பான தெளிவுரை வழங்குதல், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் மற்றும் பிற அமைப்புக்களினால் வழங்கப்படும் உதவி மற்றும் வசதிகள் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்குதல், 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வும் அத்திட்டத்தின் கீழ் காணப்படும் தொழில் முயற்சியாளர்களுக்குப் பொருத்தமான வியாபாரத்திட்டமிடல் ஆவணத்தை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: