ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது – பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கு மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, May 24th, 2021

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஒன்லைன் முறைமை ஊடாக விண்ணப்பிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts: