ஆளும் கட்சி சரியாக செயற்பட்டிருந்தால் வடமாகாண சபை கேலிக்குள்ளாகியிராது – ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, July 19th, 2018

வடமாகாண சபையின் ஆளும்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருநதால் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட இந்த மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது. இதற்கான பூரணமான பொறுப்பையும் ஆளம்கட்சியின் தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென வடமாகாண சபை எதிரக்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்துள்ளார்

உறுப்பினர் டெனீஸ்வரன் விவகாரம் குறித்து திங்கட்கிழமை பேரவை செயலகத்தில் நடைபெற்ற விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறிய தவநாதன் மேலும் கூறுகையில்:

வடமாகாணசபை ஆளுங்கட்சிக் கூட்டங்களை ஒழுங்காக நடத்தியிருந்தால் இங்கே பேசப்படும் பல பிரச்சினைகளை பேசவேண்டிய அவசியம் வந்திருக்காது. இன்று பல பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக குடியேற்றங்கள் நடக்கின்றன. இங்கே நீதியரசர், பல சட்டத்தரணிகள், அரச நிர்வாகிகள் இருக்கின்றீர்கள். ஆனால் குடியேற்றங்கள் குறித்து எவரும் கவனத்தில் எடுப்பதாக இல்லை. இன்று அமைச்சர்கள் தங்கள் நலன்களுக்காக மக்களை பாதிக்கவிட்டிருக்கின்றார்கள். மக்கள் வடமாகாண சபை எப்போது கலைக்கப்படும் என கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். வடமாகாண சபை கடந்த 4 வருடங்கள் 8 மாதங்களில் எதனையுமே திறம்படச் செய்யவில்லை என குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது இந்தப் பிரச்சினை வந்துள்ளதால் மிகுதி காலத்திலும் எதுவும் பயனுள்ளதாக நடக்காது என்றார்.

Related posts: