ஐ. நா.சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்!

ஐ.நா.சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்றுமுதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
குறித்த பொதுச்சபை கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இம்முறை ஐக்கியநாடுகள் பொதுச்சபை கூட்டம் மூன்று விடயங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.அமொரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான மாநாடு.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் உரையாற்றவுள்ள இறுதிச்சந்தர்ப்பம்.
மற்றும் கடந்த 10 வருடங்காளாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்த பான் கீ மூன் இம்முறை நடைபெறவுள்ள அமர்வுகளின் பின்னர் ஓய்வு பெறவுள்ளார் ஆகிய மூன்று விடயங்களாகும்.ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
Related posts:
|
|