எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Friday, August 13th, 2021

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

அத்துடன் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் LP எரிவாயு தேவையில் சுமார் 5 வீதத்தை உற்பத்தி செய்யும் நிலையில் இந்த தயாரிப்புகளை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சமமாக வழங்குகிறது.

மின்சக்தி அமைச்சு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சபுகஸ்கந்த பிரதேசத்தில் நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு சமையல் எரிவாயு தேவையில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலக வர்த்தக சந்தையில் காஸ் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து லாவ் காஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட லாவ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,493 ரூபாவிலிருந்து 1,856 ரூபா வரையும் 5 கிலோ எடை கொண்ட லாவ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 743 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, லிற்றோ காஸ் நிறுவனம் தற்போதைய விலைக்கு அமைவாகவே தொடர்ந்தும் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: