எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் – நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!

Monday, May 9th, 2022

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நுகர்வோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.

இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: