எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 17th, 2022

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது..

இந்த கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றையதினம் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வீட்டில் இருந்து பணியாற்றும் முறைமைக்கு அரச சேவையாளர்களை ஈடுபடுத்த முடிவெடுத்தால், அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாடசாலைகளை இணையவழி முறையில் நடத்த நிகழ்ந்தால், ஏற்படக் கூடிய இன்னல்களை குறைத்து கொண்டு அதனை முன்னெடுப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இணையவழி ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இணையவழி முறைமையில் கற்பித்தலை மேற்கொள்வது குறித்து சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: