எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை எண்ணெய் களஞ்சியங்களை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி கடந்தவாரம் கனிய எண்ணெய்ப் பணியாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
எனினும், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்மானியை வெளியிட்ட அரசாங்கம், இராணுவத்தைக் கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுத்தது.இதையடுத்து, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடமாடும் விற்பனைச் சந்தை!
பொலித்தீன் கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில்!
தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமா...
|
|