ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படு பாடசாலை விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 23rd, 2020

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை இந்தமுறை வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின். செயலாளர் என் எம் எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையினாலேயே ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அதேநேரம், ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் பல கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இதன்படி 10, 12 மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: