உளவியல் மருத்துவர்கள் பரீட்சைத் திணைக்களத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

Thursday, June 28th, 2018

பாடசாலை மாணவர்கள் தோற்றும் தேசிய பரீட்சைகளில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உளவியல் மருத்துவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்துவதனால் ஏனைய மாணவ மாணவியர் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்ற நிலை அதிகரித்துள்ளது என உளவியல் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மாணவர்களை பிரபல்யப்படுத்தல் தொடர்பில் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது கல்வி அமைச்சேயாகும் என பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts:

புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வ...
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதியிடம் மு...