“வடக்கின் போர் 112”  தொடர்பிலான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி !

Thursday, March 1st, 2018

‘வடக்கின் போர்’ என் வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது பெரும்துடுப்பாட்டம் எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன்,

மதுபோதை அல்லது போதைவஸ்துக்கள் பாவனையுள்ள எவரும் விளையாட்டினைப் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.கல்லூரி சீருடையுடன் எந்த ஒரு மாணவனும் வீதிகளில் உலாவருதலோ அல்லது பணம் சேகரித்தலில் ஈடுபடுவோரோ பாதுகாப்புத்துறையினரால் பொறுப்பேற்கப்படுவர்.

போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தின் எல்லைக்கோட்டுக்குள் இரு கல்லூரி விளையாட்டு வீரர்கள், மத்தியஸ்தர்கள், மாணவத்தலைவர்கள், வைத்திய ஆலோசகர்கள் தவிர்ந்த ஏனையோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். மீறுவோர் தண்டனைக்குரியவர்களாக கணிக்கப்படுவார்கள்.

இவ் விளையாட்டில் பாதுகாப்பினை, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உறுதி செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு இரு கல்லூரி சமூகத்தினராலும் வழங்கப்படுகிறது. இரு கல்லூரிகளாலும் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு போட்டிநடுவர் ஆட்டத்தில் நியமிக்கப்படுவர்.

Related posts: