படகுகளை விடுவிக்கும் எண்ணமில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

Wednesday, July 27th, 2016

இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைவாகவே தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்த அவர் இந்திய மீனவர்களை விடுவித்த போதிலும் அவர்களின் படகுககளை விடுவிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட 77 இந்திய மீனவர்கள் நேற்றும் நேற்று முன்தினமும் விடுதலை செய்யப்பட்டுடனர். மன்னார் மற்றும் புத்தளம் நீதிமன்றங்களால் 30 இந்திய மீனவர்களும் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்களும் கடந்த இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் வவுனியா சிறையில் தடுத்து வைகக்ப்பட்டுள்ளனர் எனினும் கைது செய்யப்பட்ட 77 மீனவர்களில் 43 பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கடல்சார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ...
அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையையில் ...
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி - நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிக...