எதிர்வரும் திங்கள்முதல் பணிக்கு திரும்புமாறு பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கு பணிப்பு!
Friday, August 14th, 2020எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மானியங்கள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றபோது கல்வி சாரா ஊரியர்கள் விடயமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி தீர்மானமும் எட்டப்பட்டது.
இந்த தீர்மானத்தில் கொரோனா தாக்கத்தின் பின்பு பல பல்கலைக் கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பாத நிலமை காணப்படுகின்றது.
இதற்கு ஆணைக்குழுவின் சுற்று நிரூபம் கிடைக்கவில்லை என கூறப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றினை ஆராய்ந குழு உடனடியாக குறித்த சுற்று நிரூபத்தை அனுப்புவதாக தீர்மானித்துள்ளது
அத்துடன் .ஆணைக் குழுவின் தீர்மானத்தின் பிரதிகள் திங்கட்கிழமை சகல பல்கலைக் கழகங்களிற்கும் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|