எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021

சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுகின்றனர்.

அதே போன்று சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை இரண்டு வாரங்களுக்குத் தொடருந்து சேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 108 தொடருந்துகள் சேவைக்குத் தயாராகவுள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் தொடருந்து புதுப்பிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விஷேட சந்திப்பு!
சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கு தகவல் தொடர்பு ஆற்றும் பணி மிகப்பெரியது - ஜனாதிபதி கோட்டபய ...
விவசாயத்தில் தன்னிறைவு காண இளைஞர்களை ஈர்க்கும் புதிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் -...