விவசாயத்தில் தன்னிறைவு காண இளைஞர்களை ஈர்க்கும் புதிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2022

இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விவசாயத் திட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது விவசாய அமைச்சின் கீழுள்ள அனைத்து வெளிநாட்டு விவசாய திட்டங்களும்  உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன்  இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி திட்டம் தொடர்பாக அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில், வயதான விவசாயிகள் மட்டுமே இன்னும் உள்ளூர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இளைஞர்கள் தாங்கள் வளர்ச்சியடைய முடியாத ஒரு துறையாக உள்நாட்டு விவசாயம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர்.

எனவே, புதிய வேளாண் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மாதிரி விவசாய கிராமங்கள், மாதிரி வேளாண் மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு போன்ற திட்டங்கள் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைப் பெற உருவாக்கப்பட வேண்டும்.

புதிய விவசாய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் பின்பற்றி வெளிநாட்டு சந்தைகளுடன்  போட்டிபோட்டு ஏற்றுமதி செய்யக்கூடிய பச்சை வெள்ளரிக்காய், மிளகாய் மற்றும் பழங்கள் போன்ற உயர் பயிர்களுக்கு தேவையான வசதிகளை இளைஞர் சமுதாயத்திற்கு பெற்றுக்கொடுக்க  வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், TEJC மாம்பழம், சோளம், சோயா, அன்னாசி, பாசிப்பழம், முள் அனோடா போன்றவற்றை விவசாய மண்டலங்களாக தொடங்கி, அந்த பகுதிகளில் இளைஞர் சமுதாயத்திற்கு அதிக இடம் வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

மேலும், இளைய தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விலகுவது நல்லதல்ல. நாட்டின் விவசாயத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் எனவும்  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: