எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.!

எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளை இன்றையதினம் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்கள் தோன்றியிருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ச இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இடைநடுவில் விலகிய மாணவர்களை இலக்கு வைக்கும் நீதிமன்றம்!
நெடுந்தீவில் குதிரைகள் உயிரிழக்கும் அபாயம்!
பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது!
|
|