எடப்பாடி பழனிசாமி இராஜினாமா எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கின்றார் ஸ்டாலின்!

Monday, May 3rd, 2021

தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி எடப்பாடி பழனிசாமி தனது இராஜினாமா கடிதத்தை, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆமோக வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிலையிலேயே, எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முன்பதாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவார்

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலையில் 125 இடங்களில் தி.முக. வென்றுள்ளது

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வரும் ஏழாம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: