எகிப்து தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்!
Monday, November 27th, 2017எகிப்தில் – சைனாய் பிரதேசத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது மிகவும் கொடூரச் செயலாகும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்து.
அரசாங்கமும் பொதுமக்களுக்கும் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவிப்பதுடன் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எகிப்து நாட்டவர் என்ற ரீதியில் ஆழ்ந்த துயரம் கொண்டுள்ள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ள, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம், எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராக போராடுவதற்குத் தேவையான சாதகமான வழிமுறைகளைச் செய்வதற்கு கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது
Related posts:
|
|