எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!

Saturday, April 27th, 2024

எகிப்தில் (Egypt) இருந்து பெரிய வெங்காய இறக்குமதியை மேற்கொள்ளவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் நேற்று (26.04.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் தூதுவர் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை – எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC), இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு, வர்த்தக உறவுகள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் நிலையான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: