வருடாந்த இடமாற்றலை அரச அலுவலர்கள் ஏற்க வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர்!

Saturday, February 11th, 2017

வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய அலுவலர்கள் வழங்கப்பட்ட இடமாற்றலை ஏற்று உரிய திகதியில் புதிய சேவை நிலையத்தில் கடமையேற்க வேண்டும். அவர்களை தற்போது உள்ள சேவை நிலையங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து திணைக்களங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017ஆம் ஆண்டுக்கான அரச சேவையில் வருடாந்த இடமாற்றங்கள் தற்போது உரிய அமைச்சு திணைக்களங்கள் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக தற்போது உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய மேன் முறையீடுகளை அந்தந்த அமைச்சு திணைக்களங்களில் மீளாய்வுசபை ஆய்வு செய்தது. மீளாய்வு சபைகளின் தீர்ப்புகள் மற்றும் தீர்மானங்கள் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பொதுச் சேவைகள் ஆணைக்குழு மூலமும் இந்த மேன்முறையீடுகள் கருத்தில் கொள்ளப்பட்டு உரிய தீர்மானங்களை வெளிப்படுத்தி உள்ளது என்று என்னிடம் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இடமாற்றங்கள் உத்தேசிக்கப்பட்ட வண்ணம் நடைமுறைப்படுத்தப்படுவது கட்டாயம். அது தொடர்பான மேன்முறையீட்டு முறைமை தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது மீண்டும் மீளாய்வு செய்யும் தேவை காணப்படவில்லை. வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய உத்தியோகத்தர்கள் உரிய திகதியில் புதிய சேவை நிலையத்தில் கடமையேற்பதற்காக சேவை நிலையத்திலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறியத் தருகின்றேன்.

ஒரு சேவை நிலையத்தில் நீண்ட காலம் தங்கியிருப்பதால் உத்தியோக்த்தருக்கு மற்றும் சேவை நிலையத்தின் வளர்ச்சிக்கு காரணங்கள் அமையாது. அனைத்து அரச சேவையின் வினைத்திறமைக்கும் இதனால் தாக்கம் ஏற்பட முடியும் என்பதை ஜனாதிபதி அவர்களதும் கருத்து என்பதை தயவாக கருத்தில் கொள்ளவும் என்றுள்ளது.

 abayakon6

Related posts: