6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தை!

Sunday, July 2nd, 2023

சேதன உரத்தை கொள்வனவு செய்வதற்காக செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், செலுத்திய தொகையை மீட்பது தொடர்பிலும் சீன அரசாங்கத்துடனும் சீன உர நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பான கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சேதன உரம் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாதிரிப் பரிசோதனை தோல்வியடைந்ததை அடுத்து, சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சேதன உரம் திருப்பியனுப்பப்பட்டது.

எனினும், அமைச்சரவை அங்கீகாரத்துடன் குறித்த நிறுவனத்துக்கு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்தியது.

இந்தநிலையில், குறித்த தொகையை ஏதேனும் ஒரு முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: