ஊழியர் கொல்லப்பட்ட விவகாரம் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு அழைப்பாணை!

Friday, October 2nd, 2020

முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய வளத்துறை அமைச்சின் வளாகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போதைய அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க பிரவேசித்தபோது ஏற்பட்ட கலவரத்தைத் தடுப்பதற்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஊழியர் ஒருவர் பலியாகியிருந்தார். இந்த சம்பவத்தில் அப்போது அமைச்சரது பாதுகாப்பு அதிகாரி சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹார் முன்பாக நடைபெற்றது. குறித்த வழக்கில் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கெதிராக அழைப்பாணையை பிறப்பிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: